Sunday 19 June 2016

நிலவும் அவளும்...


அவளின் அழகோடு ஒப்பீடு
நிலவின் அழகிற்கோ காப்பீடு
அவளின் வதனம் கண்டே
முகமூடி அணியும் நிலவே

புன்னகை மட்டும் பூக்கும்
இன் முகம் காட்டும் அவளின்
பொன்நிறத்துடன் ஈடாகுமோ தமிழ்
கவியுலகில் போற்றும் வெண்ணிறம்

அவளின் அழகுடன் போட்டியிட்டு
வெல்லமுடியா தன்மை கண்டு
அவளுடன் புகைப்படம் எடுக்க
தள்ளியே நிற்கின்ற நிலவு

Thursday 31 March 2016

மௌனம்


உலகில் சிறந்ததை உனக்காய் பரிசளிக்க
நிழலாய் தொட
ரும் நெடுநாள் வலியாய்
நான் மட்டும் இரசித்திடும் கவிதையே
உன் முன்னே பொம்மை கேட்கும் குழந்தையாய்

பிரபஞ்சமே நீயென உன்மேல் காதல்
சொல்லாத காரணங்கள் புரியாத விதிகள்
வாழ்க்கை முழுதும் உன்னுடன் கழிக்க
ஆசைகள் இருந்தும் அனுமதி இல்லை

தலை மேலே பூமி தெரிய
தலைகீழாய் நானும் எரிய
ஆசைகள் சொல்ல பாசைகள் இருந்தும்
மௌனம் மட்டும் சாதிப்பதேன்
என்னவளே?

Tuesday 22 March 2016

தண்ணீர்

பூமி பரப்பில் மூன்றில் இரண்டு 
மனித உடலில் அரைக்கு மேல்
பல உயிரினங்களின் இருப்பிடம்
மனித உயிரின் பிறப்பிடம்

பொழியும் மழையாய் நகரும் நதியாய்
தேங்கிய கடலாய் உருகும் பனிப்பாறையாய்
உலகமே உயர்வாய் அறிந்து வியக்கும்
அனைத்திலும் உள்ள அகில கரைப்பான்

தவிக்கும் வாய்க்கு தண்ணீர்
பொழியும் வரை காத்திருக்க
சக்கரவாகப் பறவை இல்லை
சற்றும் பொறுக்கா மீன்கள்

புவியிலும் சரி செவ்வாயிலும் சரி
சுன்னாகத்திலும் சரி சுவிற்சர்லாந்திலும் சரி
உணவு உடை உறையுள் மட்டுமல்ல
அகில அடிப்படைத் தேவை தண்ணீரே

Thursday 10 March 2016

ஸ்பரிசம்


பத்து மாத அருந் தவம்
பாடுபட்டு பெற்ற வரம்
மூக்குமுழி அழகு முகம்
யாரைப் போல விவாதம்

துயில் கொள்ள தொட்டில்
அன்னை மடி சூட்டில்
பராக்கு காட்ட மாய ஜாலம்
பெயர் சூட்ட எண் கோலம்

தலைமுறை வளர்க்க பிள்ளை
தனி இல்லை என்ற தலைக்கனம்
பிள்ளை பெற்ற அன்னைக்கே
தனியே உற்ற இலக்கணம்

அன்னை மட்டும் தொடர்பாடல்
அறிந்த மொழி அழுகூவல்
துயில்கொள்ள மணி ஈரெட்டு
விழித்தால் பாலூட்டி தாலாட்டு

தெறிவினை எனும் மருத்துவம்
இந்த பாமகன் கண்களுக்கோ
உயிர் தந்த அன்னை நீயென
ஒற்றை விரல் பற்றும் சிற்றுயிர்

Wednesday 3 February 2016

காதலர் தினம்


சூரியன்:
என் வெயிலுக்கு அஞ்சி அவளின்
குடைக்குள் ஒழிந்து கொள்வாய்
என பொறாமையில் பொங்கினேன்
நீயோ தெருவில் நிற்கிறாய் தனியாக...

நிலா:
"
உன்னை விட அழகானவளை காட்டுகின்றேன்"
உன் சபதம் எங்கே?
தினந்தோறும் தனியாக வருகிறாய்
உன் அழகி அவள் இன்னும் வரவில்லையா?

கடல்:
உன் காலடி மட்டும் அழிக்குறேன்
அலைகளால் தினந்தோறும்
உன் துணையின் காலடி எங்கே?
காலடி பதியாமல் நடக்கும் வித்தை தெரிந்தவளா?

தொலைபேசி:
தினமும் குறுஞ்செய்தி அனுப்பும் உனக்கு
அவளிடம் இருந்து உனக்காக
வருவதோ Delivery report மட்டுமே.....
அவள் அனுப்பும் குறும்செய்திகள் எங்கே?

மலர்கள்:
மூச்சுவிடும் மலராய் அவள்
இருக்கிறாள் என்று தற்பெருமை
நாங்கள் உன் கண்களுக்கு
மலராய் தெரியவில்லை

Friday 11 December 2015

அலிபாபா...


முள் இல்லாத ரோஜா நீ
கறைகள் இல்லாத நிலவு நீ
தூறல் இல்லாத வானவில் நீ
பக்கவிளைவு இல்லாத மருத்துவம் நீ

நெடுங் கால பழக்கம்
குறள் போல இருந்தாலும்
கொல்லும் உன் நினைவுகள்
கொடியது பெண்ணே விடத்திலும்

மையல் கொள்ளும் என் இதயத்திற்கு
மௌனம் மட்டுமே வெளியில் காட்டும்
உன் இதயம் எனும் பொக்கிஷத்தை திறக்க
மந்திரம் தெரியாத அலிபாபா நான்.....

Sunday 22 November 2015

தொலைவில் நீ...


விலகாமல் விரல் பிடித்து
அருகில் இருக்க ஆசைப்பட்டாலும்
தொலைவில் மட்டும் இருப்பது
நிலவு மட்டும் அல்ல நீயும் தான்

நெஞ்சோர நினைவே நெடுநாள் கனவே
கண்ஜாடை கவிதையே கருவிழி சித்திரமே
கம்பன் செதுக்கிய வைரப் பெண்மணி
இமைகளுள் வைத்து காப்பேன் கண்மணி