Friday, 23 September 2011

Yamma Yamma Lyrics - 7aam Arivu



யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா 
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா  
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா 
அடி ஆணோட காதல் கைரேகை போல 
பெண்ணோட காதல் கைகுட்டை போல 
கனவுக்குள்ளே அவள வைச்சேனே 
என் கண்ணு ரெண்டா திருடி போனாளே 
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே 

பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப 
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்நென்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னால்
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கைய விட்டுதான் போயாச்சு
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் பொண்ணாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முள்ளுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போதை மாத்திரை
அத போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை
  
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா 
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா  
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா 

ஓட்ட போட்ட மூங்கில் அது பாட்டு பாடக்கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் மனம் உன்ன பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு
என திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல் நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே
வான வில்லின் கோலம் நீயம்மா
என் வானந் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா 

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா 
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா  
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா 
அடி ஆணோட காதல் கைரேகை போல 
பெண்ணோட காதல் கைகுட்டை போல 
கனவுக்குள்ளே அவள வைச்சேனே 
என் கண்ணு ரெண்டா திருடி போனாளே 
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே 

Thursday, 22 September 2011

காதல் சொல்ல!!!!



வண்டு உன்னிடம் சொல்லியிருக்கும் மலரென்று நினைத்து!
மேகம் உன்னிடம் சொல்லியிருக்கும் நிலவென்று நினைத்து!
மீன் உன்னிடம் சொல்லியிருக்கும் முத்தென்று நினைத்து!
எறும்பு உன்னிடம் சொல்லியிருக்கும் வெல்லமென நினைத்து!
கவிஞன் உன்னிடம் சொல்லியிருப்பான் கவிதையென நினைத்து!
இருந்திருந்தால் நியுட்டன் கூட சொல்லியிருப்பார் அப்பிள் என்று நினைத்து!
ஆனால், நான் மட்டும் உன்னிடம் சொல்லவில்லை
ஏனெனில், நீ நண்பன் என கொல்வாய் என்று!!!!!!