உன்னுடன் சேர்ந்து காலைப்பனியில் நனைந்து
தோள் சாய்ந்து கதிரவன் வருகையை இரசிக்க
என்னருகில் நீயில்லை என் காதலே!
உன்னைப்போல் ஒரு வெண்ணிலா என
பௌர்ணமி நிலவை கேலி செய்ய
என்னருகில் நீயில்லை என் நிலவே!
மாரிகாலத் தூறலில் நேரம் மறந்து
மழையை இரசித்து அதில் நனைந்து மகிழ
என்னருகில் நீயில்லை என் கனவே!
அந்தி மாலை கைகோர்த்து காதல் உரைத்து
கவி பாடிச் சாலையில் நடக்க
என்னருகில் நீயில்லை என் தோழியே!!!