Thursday, 19 July 2012

காதல் பரிசு :(


நடுநிசி கழிந்தும் மூடாமல் 
உறங்க காத்திருக்கும் விழிகள்.....

கரைந்து போன கண்ணீரில் 
கலைந்து போன கனவுகள்.....

நாட்குறிப்பில் புரையோடிய நாடிகளாய்
அவள் பெயரின் படிவுகள்.....

இச்சையுடன் இரசிக்க முன்பே 
உடைத்து எறிந்த இசைத்தட்டுக்கள்....

குறுகிய வார்த்தைகளின் சாரலில்
நீண்ட நேர குளிர்காய்ச்சல்.....

குரங்கு மனத்திலும் குடியிருந்த 
நினைவுகளின் செறிந்த கீறல்கள்.....

நெருஞ்சிமுள் தைத்த இதயத்தில்
கசிந்துருகும் குருதிக் கலங்கள்.....

நஞ்சுடன் தந்த நட்பினால்
உயிருடன் வைத்த பிண்டங்கள்.....

Sunday, 3 June 2012

Random கிறுக்கல்...


கறுப்பு வெள்ளையாகிய நீ
இல்லாத புகைப்படங்களை பார்த்தே
உணர்ந்தேன் வண்ணங்கள்
உன்னுடையது என்று!

ஒரு கோடி நட்சத்திரம் வானில் இருந்தாலும்
நீதான் நான் தேடும் வெண்ணிலா
பார்க்கும் போதெல்லாம் Adrenaline
சுரக்க செய்கிறாய் என்னுள்!

போதையில் உளறும் குடிகாரன்
போலும் நான் இல்லை
குடிபோதை இல்லாமலே
உளறுகிறேன் உன்னை பற்றி!

என் ஐம்புலன்களையும் ஆறறிவையும்
உன் ஒரு விழி பார்வை
கொண்டு அடக்குகிறாய்
சிறிதும் தயங்காமல்!

குடைகாளானும் ரோஜா தான்
நீ அதை அன்போடு எனக்கு தந்தால்
பழைய காகித துண்டும்
காதல் வாழ்த்துமடல் ஆகும்!

உன் பெயரின் பின் என் பெயரை
இணைக்க நினைக்கிறன்
முன்னால் திருமதி
என்னும் அடைமொழியுடன்!

என் காதலை சொல்ல
கணினி மொழியைக்கூட
கலைத்து பார்த்தேன் பயனில்லை
மீதமானது ஒன்றும் பூச்சியமும்!

010010010010000001001100011011
110111011001100101
001000000101100101101111011101
010010000000101110
0010111000101110001011100010111000101110

Tuesday, 8 May 2012

Psychology


  1. When a person laughs too much even on stupid things, be sure that person is sad deep inside.
  2. When a person sleeps a lot,be sure that person is lonely.
  3. When a person talks less,and if he talks,he talks fast then it means that person keeps secrets.
  4. When someone can't cry then that person is weak.
  5. When someone eats in abnormal way then that person is in tension.
  6. When someone cry on little things then it means he is innocent & soft hearten.
  7. When someone gets angry on silly or small things it means he is in love.
So true,Try to see all these in real life,you
will find all..♥♥

Friday, 20 April 2012

காதல் கடிதம்


  


தினமும் என்னை துயிலெழுப்பும் சூரியன்...
இரவில் நான் ரசிக்கும் வெண்ணிலா.....
தூறலில் தோன்றும் வானவில்.....
அவளை போல் கண்களை பறிக்கும் மலர்கள்.....
என் நுரையீரல் புகுந்து வரும் காற்று......
இவை எல்லாம் சொல்லாத என் காதலையா......
ஒரு பக்க காதல் கடிதம் சொல்லபோகிறது !!!!!!!