Sunday, 3 June 2012

Random கிறுக்கல்...


கறுப்பு வெள்ளையாகிய நீ
இல்லாத புகைப்படங்களை பார்த்தே
உணர்ந்தேன் வண்ணங்கள்
உன்னுடையது என்று!

ஒரு கோடி நட்சத்திரம் வானில் இருந்தாலும்
நீதான் நான் தேடும் வெண்ணிலா
பார்க்கும் போதெல்லாம் Adrenaline
சுரக்க செய்கிறாய் என்னுள்!

போதையில் உளறும் குடிகாரன்
போலும் நான் இல்லை
குடிபோதை இல்லாமலே
உளறுகிறேன் உன்னை பற்றி!

என் ஐம்புலன்களையும் ஆறறிவையும்
உன் ஒரு விழி பார்வை
கொண்டு அடக்குகிறாய்
சிறிதும் தயங்காமல்!

குடைகாளானும் ரோஜா தான்
நீ அதை அன்போடு எனக்கு தந்தால்
பழைய காகித துண்டும்
காதல் வாழ்த்துமடல் ஆகும்!

உன் பெயரின் பின் என் பெயரை
இணைக்க நினைக்கிறன்
முன்னால் திருமதி
என்னும் அடைமொழியுடன்!

என் காதலை சொல்ல
கணினி மொழியைக்கூட
கலைத்து பார்த்தேன் பயனில்லை
மீதமானது ஒன்றும் பூச்சியமும்!

010010010010000001001100011011
110111011001100101
001000000101100101101111011101
010010000000101110
0010111000101110001011100010111000101110