Thursday, 19 July 2012

காதல் பரிசு :(


நடுநிசி கழிந்தும் மூடாமல் 
உறங்க காத்திருக்கும் விழிகள்.....

கரைந்து போன கண்ணீரில் 
கலைந்து போன கனவுகள்.....

நாட்குறிப்பில் புரையோடிய நாடிகளாய்
அவள் பெயரின் படிவுகள்.....

இச்சையுடன் இரசிக்க முன்பே 
உடைத்து எறிந்த இசைத்தட்டுக்கள்....

குறுகிய வார்த்தைகளின் சாரலில்
நீண்ட நேர குளிர்காய்ச்சல்.....

குரங்கு மனத்திலும் குடியிருந்த 
நினைவுகளின் செறிந்த கீறல்கள்.....

நெருஞ்சிமுள் தைத்த இதயத்தில்
கசிந்துருகும் குருதிக் கலங்கள்.....

நஞ்சுடன் தந்த நட்பினால்
உயிருடன் வைத்த பிண்டங்கள்.....