Tuesday, 6 May 2014

Dear பிரம்மா!!!

இரக்கமில்லாமல் அவளை படைத்து
இரவு பகலாய் நினைக்கவைத்து
இடுகாடு செல்லும் வரை
இரு கண்ணில் வலியோடு
இச்சையுடன் அனுபவிக்க
இன்னல்களை அள்ளித்தந்து
இப்படியொரு நிலை தந்ததாய்
இது மாற வழியில்லையா??

இப்படிக்கு
இவன்!!!

Saturday, 1 March 2014

சிறகொடிந்த பறவை


மெல்ல விலகிச் சென்றாய்
கொள்ளை நினைவால் கொன்றாய்
சொல்லித் தீராத எரிவு
சொல்லாத உந்தன் பிரிவு

நெய்தல் சேராத நெடு நதியாய்
Viber இல்லாத வாலிபனாய்
குகனை இழந்த இராமனாய்
கொஞ்சமும் இல்லாத குபேரனாய்

குவியத்தில் குவிக்காத வில்லையாய்
குழம்பி குமிறும் பிள்ளையாய்
கண்ணீரில் இமைகள் மூழ்கும்
காலமும் கேலி பாடும்

நீள வான் இருந்தாலும்
மீளும் நினைவுகளுடன்
கூனிக் குறை நினைக்கும்
சிறகொடிந்த பறவையானேன்

Saturday, 22 February 2014

விழித்துக்கொள்


பரம்பரைகளாய் படரும் சாதிவெறி
பற்றிக்கொண்டு எரியும் தீப்பொறி
திருந்தாத மக்கள் மத்தியில்
திணரும் ஒரு தீக்குரல்

ஓட்டைக் குடத்தில் நீர் நிரப்பி
ஒற்றுமையை விரும்பும் சிலர்
சாதியை கரைத்துக் குடித்து
சாதாரணமாய் சாகும் பலர்

சாதியில் தாழ்ந்தவன் சாத்தான்
குலத்தில் குறைந்தவன் குற்றவாளி
குறும்பார்வை கொண்டவன் மத்தியில்
குறுடனாய் வாழும் மந்தைகள்

எத்தனை காலம் வந்து போனாலும்
பித்தனைப் போல் பிரித்து வைக்கும்
தலைக்கு மேல் வெள்ளம் போனாலும்
தரையை பற்றும் மந்திகள்

சாதியை உமிழும் ஊன் சதையே
பிறந்தது சாதியின் வயிற்றிலா அல்ல
உன் அன்னையின் வயிற்றிலா
பிறக்குமுன் அன்னையின் சாதி அறிந்ததுண்டோ?

Monday, 3 February 2014

கலையரங்கம்



அரங்கத்தின் மேலே பிறை நிலா
அரங்கம் உள்ளே பெண் நிலா
புன்னகை அணிந்த அவளுக்கு
பிற நகை அணிய அவசியமா?

மஞ்சள் கலந்த ஆடை
மங்கை இவளோ நீரோடை
மரித்தாலும் மறக்காத கனவு
மறுத்தாலும் உருக்கும் நினைவு

இளங்காற்றும் கூந்தல் வருட
இசைப்பாட்டும் இவளை நினைக்க
இரவோடு இவள் வெளிச்சம்
விண்மீனின் ஒளி மிச்சம்

Saturday, 18 January 2014

இரயில் பயணம்


ஏழே காலுக்கு இனிதே ஆரம்பம்
எனது கால்களுக்கு இன்னல் ஆரம்பம்

Express என்று ஏமாற்றம்
ஆமை போல தடுமாற்றம்

அன்னையின் பொதி சோறு
அன்புடன் கலந்த ருசியோடு

இருபக்கமும் இயற்கை
இடையிடையே இடிமழை

அகவும் மயில்கள் அசைந்தாட்டம்
அலறும் இரயிலோ குத்தாட்டம்

பருவ நங்கை பக்கத்து Seat இல்
நங்கையின் நாய்க்குட்டி அடுத்த Seat இல்

காலடிக்கு கதறி வரும்
காலாவதியான கார உணவுகள்

மாஹோவில் திசைமாற்றம்
முன்பின்னாகி முக மாற்றம்

பொதி தூக்கும் பொது மக்கள் அதை
பொறுப்பாய் தூக்கும் பிறர் மக்கள்

பத்து மணி நேரப் பயணம்
பித்து பிடிக்கும் துயரம்