பரம்பரைகளாய் படரும் சாதிவெறி
பற்றிக்கொண்டு எரியும் தீப்பொறி
திருந்தாத மக்கள் மத்தியில்
திணரும் ஒரு தீக்குரல்
ஓட்டைக் குடத்தில் நீர் நிரப்பி
ஒற்றுமையை விரும்பும் சிலர்
சாதியை கரைத்துக் குடித்து
சாதாரணமாய் சாகும் பலர்
சாதியில் தாழ்ந்தவன் சாத்தான்
குலத்தில் குறைந்தவன் குற்றவாளி
குறும்பார்வை கொண்டவன் மத்தியில்
குறுடனாய் வாழும் மந்தைகள்
எத்தனை காலம் வந்து போனாலும்
பித்தனைப் போல் பிரித்து வைக்கும்
தலைக்கு மேல் வெள்ளம் போனாலும்
தரையை பற்றும் மந்திகள்
சாதியை உமிழும் ஊன் சதையே
பிறந்தது சாதியின் வயிற்றிலா அல்ல
உன் அன்னையின் வயிற்றிலா
பிறக்குமுன் அன்னையின் சாதி அறிந்ததுண்டோ?