Friday, 5 August 2011
Thuli Thuli - Paiya
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும் பொது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா .
அழகாய் மனதை பறித்து விட்டாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவளொரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பறித்து விட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன் பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும் போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மெளனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டால்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்து விட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
Labels:
Paiya,
Thuli Thuli
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment