Saturday, 16 November 2013

முடியும்!


கூழாங்கல்லும் குறுக்கலையை ஆக்கும்
ஒற்றைச்சொல்லும் வன்முறையை தீர்க்கும்
முட்டைச் Cell உம் உயிரினம் தரும்
வெற்றுக்கதையும் இலக்கியம் ஆகும்
பட்டுப்புழுவும் வாணிபம் செய்யும்
உப்புக்கடலும் குடிநீர் சிந்தும்
யாரும் வீண் இல்லை
நீயும் காண் எல்லை
உன்னாலும் முடியும் என்று
எந்நாளும் உணர்தல் நன்று

Friday, 1 November 2013

ரோஜாவும் அவளும்


உன்னை விட அழகி
நீண்ட நாள் பழகி
ஏற்க மறுத்தாள் உன்னை
பார்க்க வெறுத்தாள் என்னை

உன்னை விட வாசமாய்
அவள் மீது பாசமாய்
முட்கள் இல்லாத நீயோ
சொற்கள் இல்லாத அவளோ

உன்னை நன்று மதித்து
என்னையும் மீண்டும் நினைத்து
என்றாவது மீண்டு வருவாள்
அன்று வரைக்கும் உதிராதே!!!!

Sunday, 27 October 2013

இராப்பூச்சிகள்


காலையில் கண்கவர் Car இல்
மாலையில் மந்தை போல் Bar இல்
இப்படியும் இருக்கும் இந்த மனிதன்
எப்படியும் வாழும் மிருக வாழ்க்கை

பருகிச் சுவைக்கும் மதுபானம்
அருகி இருக்கும் பெண் மானம்
பெருகி வரும் விபச்சாரம்
கருகி போகும் கலாச்சாரம்

இச்சையை தீர்க்க HIV துணை
பிச்சையாய் கிடைக்கும் எச்சப் பணம்
மிச்சமாய் எஞ்சும் தீராத நோயை
துச்சமாய் எண்ணும் வெம்பிய மாந்தர்

நடுனிசி நங்கையர்களே!
கருக்கலைக்கும் இத் திறனும்
கற்பை விற்கும் இத் தொழிலும்
தேர்ந்தெடுக்கப்பட்டதா? திணிக்கப்பட்டதா?

Wednesday, 16 October 2013

சமர்ப்பணம்


முகமதை நினைத்தே முயற்சிகள் சில
அகமதை நினைத்தே எழுத்துக்கள் பல
கனிமொழி கேட்டே வார்த்தைகள் சில
கருவிழி பார்த்தே கவிதைகள் பல

கனவிலே உன்னுடன் காதல்
நனவிலே தினமும் சாதல்
நினைவிலே உன்னால் வாடல்
நிஜத்திலே உன்மீது பாடல்

கானல் நீரில் மீன் வளர்த்தேன்
காற்று இன்றி குழல் இசைத்தேன்
கண்ணை மூடி காதல் செய்தேன்
பெண்ணே நானும் கவிஞன் ஆனேன்

Monday, 7 October 2013

நான் கண்ட பட்டினம்


துரித உணவில் துயரம் தேடும் மேதாவிகள்
சிறு வயதிலே சிகரட் தேடும் மாணவர்கள்
அழகு  நிலையங்களில் அழகை தேடும் பெண்கள்
மதுபான நிலையங்களில் மாதுவை தேடும் ஆண்கள்

மாட மாளிகையில் வசிக்கும் மட்டமான மைந்தர்கள்
உயரமான கட்டிடங்களில் இருக்கும் உயராத மனிதர்கள்
அரைச்சாணில் ஆடையணியும் மங்கையர் கூட்டம்
கலாச்சாரத்தை கருக்கலைக்கும் நாகரீக வட்டம்

Pizzaவாக மாறிய தேசிய உணவு
பீப்பாவாக மாறிய பிரம்மாண்ட வயிறு
IPhoneக்கு அடம்பிடிக்கும் குழந்தை
Papper  மட்டுமே உண்ணும் மந்தை

சோற்றுக்கு பதில் அரிசி தரும் உணவகங்கள்
காற்றுக்கு பதில் காபன் நிரப்பும் சாலைகள்
சட்டங்களை வளைக்கும் சாகசங்கள்
பட்டங்களை விற்கும் வாணிபங்கள்

Wednesday, 4 September 2013

தரிசனம்



வீதிக்கு குறுக்கே வீணை நடமாட்டம்
பார்ப்பவர் எல்லாம் பாதி தடுமாற்றம்
காற்றுக்கும் ஆசை அவளை தீண்டிவிட ஒளிக்
கீற்றுக்கும் ஆசை என்னை முந்திவிட

வாலியும் எழுதாத கவிதை அவள்
கற்கவும் முடியாத மொழியும் அவள்
தேடியும் தொலைத்தேன் அவளை
தெருவோர தரிசிப்பில் உயிர் பிழைத்தேன்

கண்ணாடியில் அவள் விம்பம்
பெண்ணாகி எனைக் கொல்லும்
பின்னாலே அலையச் சொல்லி
அவளின் அழகோ வெட்டிக்கொல்லும்

நாடித்துடிப்பிலும் அவள் நாமம்
நத்தைச்சுறுளிலும் அவள் கானம்
அவளை பார்க்கச்சொல்லி கொஞ்சம்
தினம் ஏங்கும் என் நெஞ்சம்

Tuesday, 20 August 2013

வெண்ணிலா...


பெளர்ணமி நிலா இருக்கிது
என் பருவ நிலாவை காணவில்லை
பார்த்தோ பல காலம்
பாவி என் கலிகாலம்
இருண்டு போனது என் உலகம்
தினமும் மனதில் பெருங் கலகம்
தாகம் தீர்க்க வழியில்லை
பாகம் நீயே வேறில்லை
மேகம் தாண்டி வருவாயா ஒளிவீச
சோகம் தொலைத்து சொர்க்கம் சேர்க்க <3 <3 <3

Saturday, 20 July 2013

உவமையவள்

இரவிலும் தெரியும் வானவில்
பகலிலும் தெரியும் விண்மீன்
பூவின் தேனிலும் இனிதான மது
மழலை தோலிலும் மென்மையான மாது

வதனமது பனிமலை அதில்
கண்களோ Penguin பறவை
கூந்தலானது கறுப்பு நீர்வீழ்ச்சி
புருவங்களோ என்மீது வாள்வீச்சு

அவளின் அழகில் தொலைந்து
புன்னகை மழையில் நனைந்து
வர்ணித்து பாடும் வாலி அல்ல நான்
குடி வெறியில் உழறும் போலி

Thursday, 11 July 2013

நீ...


காலங்கள் எல்லாம் மறக்கச் செய்தாய்
நேரங்கள் எல்லாம் நீயே ஆனாய்
சோகங்கள் எல்லாம் நிறைத்துச் சென்றாய்
எண்ணங்கள் எல்லாம் உனை நினைக்கச் செய்தாய்

கண்ணின் அருகில் அருவி தந்தாய்
காரிருள் பரப்பி தனிமை செய்தாய்
ரோஜாவை நினைக்க முட்களை தந்தாய்
நினைவுகளால் எனை மிதக்க செய்தாய்

உன்னருகில் இடம் தேடிய புகைப்படம் தந்தாய்
உவமைகளால் உனை உயரச் செய்தாய்
கவியிலும் உனை கருவாகச் செய்தாய்
காதலால் எனை பணியச் செய்தாய்

ஐந்து அறிவுக்கு அன்பு செலுத்தி
என் ஆறறிவை தீயில் இட்டாய்
மெளனம் பேசி யுத்தம் செய்தாய்
பெண்ணே புரியாமல் எனை புலம்ப வைத்தாய்

Friday, 10 May 2013

ஓராண்டு...!!!

கண்ணாடியும் காதல் கொள்ளும்
உண்மை விம்பம் நீ...
காரிருளில் நிழல் தெரியும்
ஒளி காலும் இரு வாயி...

அரைமதி தெரிந்தாலும் அதுவொரு அழகு
அரைமொழி பேசினாலும் அவளின்மொழி அரிது
புகைப்படங்களால் பூகம்பங்கள் புரியும்
புன்னகையுடன் பூரிக்கும் புதுவித அழகு

ஓரக் கண்ணால் பார்த்தாலும்
ஓராயிரம் மின்னலை வீசியவள்
பரிதாபத்திலும் எனை பார்க்க மறுத்து
போன பனிமலர் பாவை

நிலவே, உனை பார்க்க ஆசைப்பட்டேன்
உரசிச் செல்லும் மேகமாக அல்ல
தொலைவில் வாடும் விண்மீனாக
விரட்டியடித்தாய் வீழ்ந்தே மாயும் தூறலாக...!!!

நிறுத்திப்போன நினைவலைகள்
நெருப்பாக சுடுகின்றது
தேன் மொழி உடையாளே
தீராத வலி தந்து போன தேனோ

அவளின் அழகோ மலரும் பூவிலும் நன்று
Google உம் தொலையும் அவளை தேடிச்சென்று
அவளை கேட்டு வருடம் ஒன்று
விலகி போனாள் விழியால் கொன்று
மோனை மட்டுமே எனது கவியில்
என் வாழ்க்கை வட்டமே அவளின் மொழியில்

முதல் நாள் கண்டேன்
போலிகளின் நடுவில் தேவதை
அறிமுகம் ஆனதும் அவளே
ஆவி வதைப்பதும் அவளே

அன்று தொடங்கிய என் தொலைவு
வெதுப்பகச் சூழலில் வெண்ணிலவு
புலம்ப வைத்த புது முகம்
புரியாமல் போன பூ வனம்

முட்டாள் தினத்தில் முகவுரை
மறுநாள் அதற்கு தெளிவுரை
மறுபடி May யில் புத்துயிர்ப்பு
மறுத்தே போனது அவள் விருப்பு

என்னை வதைக்க வந்த தேவதை
நான் முயன்று தொலைத்த தென் வதை
காத்திருந்த காலங்களில் கவி வடிப்பு
என்று மீளுமோ இந்த வீண் துடிப்பு ...

Wednesday, 8 May 2013

யாரொ அவள்...???


அமைதியாய் கொல்லும் Einstein theory யே
விழியொளிக்கதிர் வீசி சுடுகிறாய் என்னை
கனிமொழி பேசியே காதலை ஒதுக்கினாய்
காலமெல்லாம் உன் கரையா நினைவுகளுடன்
கவிதை எழுதவைத்த கருப்பொருள் நீயே என்னை
அனைவரும் கேட்பது "யாரொ அவள்???"
உன் பெயர் கூற நொடிப்பொழுது போதும் நானோ
தமிழனாய் இருந்தாலும் கா
ட்டிக்கொடுக்காத கவிஞன்...!!!

அவளே

Alcohol இல் இல்லாத போதை அவளை பார்த்தவுடன்
புவி சுற்றும் செய்மதிக்கும் தலை சுற்றும்
சூரியனும் சற்று பிந்தியே வீடு செல்கிறது
அவளை பார்த்து காலம் மறந்து

Fb யில் அவளை தேடுவதே hobby என்
Android உம் அடம்பிடிக்கின்றது அவளை தேடி
அருகில் நின்றால் வார்த்தை வரவில்லை
தொலைவில் சென்றால் மூச்சே வரவில்லை

முதல் நாளே போலிகளின் நடுவில் தேவதை அவ்விடத்தில்
கடந்து சென்றால் அதே நினைவு
நினைவுகளை நிரப்பி நிஜத்தில் நிற்காத அவளோ
என் நிஜங்களை எரித்த கண்ணகியின் நகலோ <3 <3 <3

Saturday, 16 February 2013

நட்பு


வரைவிலக்கணம் அற்ற செம்மொழி
முடிவுகள் இல்லாத வான்வெளி
இருபாலினர்க்கும் இருக்கும் கற்பு
நிஜங்கள் நிறைந்த நட்பு...!!!

வெறுத்தாலும் விட்டுக்கொடுக்கும்
அடித்தாலும் அரவணைக்கும்
அருகில் இருந்தால் ஆர்ப்பரிக்கும்
தொலைவில் சென்றாலும் தொடரும் நட்பு...!!!

இதிகாச நட்பும் இணை நிற்காத
துணை நின்று சுமக்கும் நம் நட்பு
குறுஞ்செய்திகளில் குறள்கள் எழுதும்
வள்ளுவன் எழுதாத நான்காம்பால்
நாம் மட்டுமே உணர்ந்த "நட்பின்பால்"...!!!!!!!!