Friday, 10 May 2013

ஓராண்டு...!!!

கண்ணாடியும் காதல் கொள்ளும்
உண்மை விம்பம் நீ...
காரிருளில் நிழல் தெரியும்
ஒளி காலும் இரு வாயி...

அரைமதி தெரிந்தாலும் அதுவொரு அழகு
அரைமொழி பேசினாலும் அவளின்மொழி அரிது
புகைப்படங்களால் பூகம்பங்கள் புரியும்
புன்னகையுடன் பூரிக்கும் புதுவித அழகு

ஓரக் கண்ணால் பார்த்தாலும்
ஓராயிரம் மின்னலை வீசியவள்
பரிதாபத்திலும் எனை பார்க்க மறுத்து
போன பனிமலர் பாவை

நிலவே, உனை பார்க்க ஆசைப்பட்டேன்
உரசிச் செல்லும் மேகமாக அல்ல
தொலைவில் வாடும் விண்மீனாக
விரட்டியடித்தாய் வீழ்ந்தே மாயும் தூறலாக...!!!

நிறுத்திப்போன நினைவலைகள்
நெருப்பாக சுடுகின்றது
தேன் மொழி உடையாளே
தீராத வலி தந்து போன தேனோ

அவளின் அழகோ மலரும் பூவிலும் நன்று
Google உம் தொலையும் அவளை தேடிச்சென்று
அவளை கேட்டு வருடம் ஒன்று
விலகி போனாள் விழியால் கொன்று
மோனை மட்டுமே எனது கவியில்
என் வாழ்க்கை வட்டமே அவளின் மொழியில்

முதல் நாள் கண்டேன்
போலிகளின் நடுவில் தேவதை
அறிமுகம் ஆனதும் அவளே
ஆவி வதைப்பதும் அவளே

அன்று தொடங்கிய என் தொலைவு
வெதுப்பகச் சூழலில் வெண்ணிலவு
புலம்ப வைத்த புது முகம்
புரியாமல் போன பூ வனம்

முட்டாள் தினத்தில் முகவுரை
மறுநாள் அதற்கு தெளிவுரை
மறுபடி May யில் புத்துயிர்ப்பு
மறுத்தே போனது அவள் விருப்பு

என்னை வதைக்க வந்த தேவதை
நான் முயன்று தொலைத்த தென் வதை
காத்திருந்த காலங்களில் கவி வடிப்பு
என்று மீளுமோ இந்த வீண் துடிப்பு ...

No comments:

Post a Comment