Saturday, 3 January 2015

நற்சான்று


புனல் இல்லா வயலில்
எரிமலைக் குழம்பு பாய்ச்சி
பூக்க நின்ற செடியில்
எரிஅமிலம் ஊற்றி

மூன்று வேளையும் விருந்து தந்து
முடிவினில் சொல் விஷம் தந்து
உயிரோடு புதைத்த
இடுகாட்டுப் பயணம்

ஈனப் பெயர்களால் கவி
இரத்தம் ஊறிய செவி
தூக்கம் தொலைந்தாலும்
துக்கம் தொலையவில்லை

நற்சான்று என்ற பெயரில்
நாவினால் வீண் பெயரில்
சேற்றை வாரி உமிழ்ந்த
நான் பன்னீரில் வைத்திருந்த மைம்மா

No comments:

Post a Comment