Saturday 6 August 2011

Oru kal Oru Kannaadi - Siva Manasula Shakthi

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

திமிருக்கு மறு பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே

தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே

கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தான்

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழல் உடனே நான் வருவேன்

புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்

உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்கை
மௌனத்தில் இருக்கும் எண்ண வரிகள்
காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்ல

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

Friday 5 August 2011

Kan Pesum Varthai - 7G Rainbow Colony

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை -
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை


காட்டிலே காயும் நிலவை
கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒலியை பிடிக்க
மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி
வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
அட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

யே கண் பேசும் வார்த்தை .......
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை... 

Thuli Thuli - Paiya



துளி  துளி  துளி  மழையாய்  வந்தாளே 
சுட  சுட  சுட  மறைந்தே  போனாளே 
பார்த்தால்  பார்க்க  தோன்றும் 
பேரை  கேட்க  தோன்றும் 
பூப்போல்  சிரிக்கும்  பொது 
காற்றாய்  பறந்திட  தோன்றும் 

செல்  செல்  அவளுடன்  செல் 
என்றே  கால்கள்  சொல்லுதடா 
சொல்  சொல்  அவளுடன்  சொல் 
என்றே  நெஞ்சம்  கொல்லுதடா .
அழகாய்  மனதை  பறித்து  விட்டாளே  

துளி  துளி  துளி  மழையாய்  வந்தாளே 
சுட  சுட  சுட  மறைந்தே  போனாளே 

 தேவதை  அவளொரு  தேவதை 
அழகிய  பூமுகம்  காணவே 
ஆயுள்  தான்  போதுமோ 
காற்றிலே  அவளது  வாசனை 
அவளிடம்  யோசனை  கேட்டு  தான் 
பூக்களும்  பூக்குமோ 
நெற்றி  மேலே  ஒற்றை  முடி  ஆடும்போது 
நெஞ்சுக்குள்ளே  மின்னல்  பூக்கும் 
பார்வை  ஆளை  தூக்கும் 
கன்னம்  பார்த்தால்  முத்தங்களால் 
தீண்ட  தோன்றும் 
பாதம்  ரெண்டும்  பார்க்கும்  போது 
கொலுசாய்  மாற  தோன்றும் 
அழகாய்  மனதை  பறித்து  விட்டாளே 

செல்  செல்  அவளுடன்  செல் 
என்றே  கால்கள்  சொல்லுதடா 
சொல்  சொல்  அவளுடன்  சொல் 
என்றே  நெஞ்சம்  கொல்லுதடா 

சாலையில்  அழகிய  மாலையில் 
அவளுடன்  போகவே  ஏங்குவேன் 
தோள்களில்  சாயுவேன்  பூமியில்  விழுகிற  வேளையில் 
நிழலையும்  ஓடிப்போய்  ஏந்துவேன்  நெஞ்சிலே  தாங்குவேன் 
காணும்  போதே  கண்ணால்  என்னை  கட்டி  போட்டாள் 
காயம்  இன்றி  வெட்டி  போட்டாள் 
உயிரை  ஏதோ  செய்தாள் 
மெளனமாக  உள்ளுக்குள்ளே  பேசும்போதும் 
அங்கே  வந்து  ஒட்டு  கேட்டால் 
கனவில்  கூச்சல்  போட்டாள் 
அழகாய்  மனதை  பறித்து விட்டாளே  

செல்  செல்  அவளுடன்  செல் 
என்றே  கால்கள்  சொல்லுதடா 
சொல்  சொல்  அவளுடன்  சொல் 
என்றே  நெஞ்சம்  கொல்லுதடா 

துளி  துளி  துளி  மழையாய்  வந்தாளே 
சுட  சுட  சுட  மறைந்தே  போனாளே 
துளி  துளி  துளி  மழையாய்  வந்தாளே 
சுட  சுட  சுட  மறைந்தே  போனாளே

Uyire Uyire - Bombay



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

(உயிரே)

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்......

Pogaadhe Pogaadhe - Deepavali





போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த காலங்கள்யாவும் கனவாய் என்னை மூடுதடி
யாறென்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருபேன்.... உயிரோடு பார்த்திருபேன்....

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தேவான ஏமாற்றம் தங்களையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருண்டதடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான்  இறப்பேன்