Sunday 27 October 2013

இராப்பூச்சிகள்


காலையில் கண்கவர் Car இல்
மாலையில் மந்தை போல் Bar இல்
இப்படியும் இருக்கும் இந்த மனிதன்
எப்படியும் வாழும் மிருக வாழ்க்கை

பருகிச் சுவைக்கும் மதுபானம்
அருகி இருக்கும் பெண் மானம்
பெருகி வரும் விபச்சாரம்
கருகி போகும் கலாச்சாரம்

இச்சையை தீர்க்க HIV துணை
பிச்சையாய் கிடைக்கும் எச்சப் பணம்
மிச்சமாய் எஞ்சும் தீராத நோயை
துச்சமாய் எண்ணும் வெம்பிய மாந்தர்

நடுனிசி நங்கையர்களே!
கருக்கலைக்கும் இத் திறனும்
கற்பை விற்கும் இத் தொழிலும்
தேர்ந்தெடுக்கப்பட்டதா? திணிக்கப்பட்டதா?

Wednesday 16 October 2013

சமர்ப்பணம்


முகமதை நினைத்தே முயற்சிகள் சில
அகமதை நினைத்தே எழுத்துக்கள் பல
கனிமொழி கேட்டே வார்த்தைகள் சில
கருவிழி பார்த்தே கவிதைகள் பல

கனவிலே உன்னுடன் காதல்
நனவிலே தினமும் சாதல்
நினைவிலே உன்னால் வாடல்
நிஜத்திலே உன்மீது பாடல்

கானல் நீரில் மீன் வளர்த்தேன்
காற்று இன்றி குழல் இசைத்தேன்
கண்ணை மூடி காதல் செய்தேன்
பெண்ணே நானும் கவிஞன் ஆனேன்

Monday 7 October 2013

நான் கண்ட பட்டினம்


துரித உணவில் துயரம் தேடும் மேதாவிகள்
சிறு வயதிலே சிகரட் தேடும் மாணவர்கள்
அழகு  நிலையங்களில் அழகை தேடும் பெண்கள்
மதுபான நிலையங்களில் மாதுவை தேடும் ஆண்கள்

மாட மாளிகையில் வசிக்கும் மட்டமான மைந்தர்கள்
உயரமான கட்டிடங்களில் இருக்கும் உயராத மனிதர்கள்
அரைச்சாணில் ஆடையணியும் மங்கையர் கூட்டம்
கலாச்சாரத்தை கருக்கலைக்கும் நாகரீக வட்டம்

Pizzaவாக மாறிய தேசிய உணவு
பீப்பாவாக மாறிய பிரம்மாண்ட வயிறு
IPhoneக்கு அடம்பிடிக்கும் குழந்தை
Papper  மட்டுமே உண்ணும் மந்தை

சோற்றுக்கு பதில் அரிசி தரும் உணவகங்கள்
காற்றுக்கு பதில் காபன் நிரப்பும் சாலைகள்
சட்டங்களை வளைக்கும் சாகசங்கள்
பட்டங்களை விற்கும் வாணிபங்கள்