Wednesday 4 September 2013

தரிசனம்



வீதிக்கு குறுக்கே வீணை நடமாட்டம்
பார்ப்பவர் எல்லாம் பாதி தடுமாற்றம்
காற்றுக்கும் ஆசை அவளை தீண்டிவிட ஒளிக்
கீற்றுக்கும் ஆசை என்னை முந்திவிட

வாலியும் எழுதாத கவிதை அவள்
கற்கவும் முடியாத மொழியும் அவள்
தேடியும் தொலைத்தேன் அவளை
தெருவோர தரிசிப்பில் உயிர் பிழைத்தேன்

கண்ணாடியில் அவள் விம்பம்
பெண்ணாகி எனைக் கொல்லும்
பின்னாலே அலையச் சொல்லி
அவளின் அழகோ வெட்டிக்கொல்லும்

நாடித்துடிப்பிலும் அவள் நாமம்
நத்தைச்சுறுளிலும் அவள் கானம்
அவளை பார்க்கச்சொல்லி கொஞ்சம்
தினம் ஏங்கும் என் நெஞ்சம்