Saturday 20 July 2013

உவமையவள்

இரவிலும் தெரியும் வானவில்
பகலிலும் தெரியும் விண்மீன்
பூவின் தேனிலும் இனிதான மது
மழலை தோலிலும் மென்மையான மாது

வதனமது பனிமலை அதில்
கண்களோ Penguin பறவை
கூந்தலானது கறுப்பு நீர்வீழ்ச்சி
புருவங்களோ என்மீது வாள்வீச்சு

அவளின் அழகில் தொலைந்து
புன்னகை மழையில் நனைந்து
வர்ணித்து பாடும் வாலி அல்ல நான்
குடி வெறியில் உழறும் போலி

Thursday 11 July 2013

நீ...


காலங்கள் எல்லாம் மறக்கச் செய்தாய்
நேரங்கள் எல்லாம் நீயே ஆனாய்
சோகங்கள் எல்லாம் நிறைத்துச் சென்றாய்
எண்ணங்கள் எல்லாம் உனை நினைக்கச் செய்தாய்

கண்ணின் அருகில் அருவி தந்தாய்
காரிருள் பரப்பி தனிமை செய்தாய்
ரோஜாவை நினைக்க முட்களை தந்தாய்
நினைவுகளால் எனை மிதக்க செய்தாய்

உன்னருகில் இடம் தேடிய புகைப்படம் தந்தாய்
உவமைகளால் உனை உயரச் செய்தாய்
கவியிலும் உனை கருவாகச் செய்தாய்
காதலால் எனை பணியச் செய்தாய்

ஐந்து அறிவுக்கு அன்பு செலுத்தி
என் ஆறறிவை தீயில் இட்டாய்
மெளனம் பேசி யுத்தம் செய்தாய்
பெண்ணே புரியாமல் எனை புலம்ப வைத்தாய்